வாய்ப்பை தக்கவைக்குமா இந்தியா?

நவி மும்பை, அக். 23- ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு நவி​மும்​பை​யில் உள்ள டி.ஓய்​.​பாட்​டீல் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இந்​தியா – நியூஸிலாந்து அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய மகளிர் அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்​ளது.
அரை இறு​திக்கு முன்​னேற வேண்​டும் என்​றால் எஞ்​சி​யுள்ள 2 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்​றாக வேண்​டும் என்ற நெருக்​கடி​யுடன் இந்​திய மகளிர் அணி களமிறங்​கு​கிறது.
நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக இன்று இந்​திய அணி மோதும் லீக் ஆட்​டம் காலிறுதி ஆட்​ட​மாகவே பார்க்​கப்​படு​கிறது.
இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி வெற்றி பெற்​றால் அரை இறு​திக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்​பை கடைசி அணி​யாக தக்​க​வைத்​துக் கொள்​ளலாம். ஏனெனில் தென் ஆப்​பிரிக்கா 10 புள்​ளி​களு​ட​னும், ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்து அணி​கள் தலா 9 புள்​ளி​களு​ட​னும் ஏற்​கெனவே அரை இறு​திக்கு முன்​னேறி​விட்​டன.
ஒரு​வேளை இந்​திய அணி இன்​றைய ஆட்​டத்​தில் தோல்வி அடைந்​தால் கடைசி ஆட்​டத்​தில் வங்​கதேச அணிக்கு எதி​ராக கட்​டா​யம் பெற்​றாக வேண்​டும். அதேவேளை​யில் இங்​கிலாந்து அணி, நியூஸிலாந்தை தோற்​கடிக்க வேண்​டும்.
இது நிகழ்ந்​தால் மட்​டுமே இந்​திய அணிக்கு அரை இறுதி வாய்ப்பு கைகூடும்.
இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் பேட்​டிங்​குக்கு சாதக​மான ஆடு​களத்​தில் 7 விக்​கெட்​கள் கைவசம் இருந்த போதி​லும் இறு​திக்​கட்​டத்​தில் 54 பந்​துகளில் 56 ரன்​களை சேர்க்க முடி​யாமல் 4 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​திருந்​தது. அணி​யின் பிர​தான பிரச்​சினை 6-வது பந்து வீச்​சாளர் தேர்​வாக இருந்து வரு​கிறது.
இதன் காரணமாக சரி​யான அணிச்​சேர்க்​கையை அமைப்​ப​தில் அணி நிர்​வாகம் தடு​மாறி வரு​கிறது. இதுவே சொந்த மண்​ணில் நடை​பெறும் உலகக் கோப்பை தொடரில் அழுத்​தத்தை கையாள முடி​யாமல் போராடும் நிலைக்கு இந்​திய அணி தள்​ளப்​பட்​டுள்​ள​தாக கருதப்​படு​கிறது.