வாய்மையே வெல்லும் – பிரியங்கா காந்தி

புதுடெல்லி ஆகஸ்ட் 4
ராகுல் காந்தியின் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள பிரியங்கா காந்தி வாய்மையே வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்
பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “மூன்று விஷயங்களை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது: சூரியன், நிலவு, உண்மை – கவுதம புத்தர்” என்று தெரிவித்துள்ளார். மேலும், நியாயமான தீர்ப்புக்காக உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், சத்தியமே ஜெயதே “(வாய்மையே வெல்லும்”) என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல் காங்கிரஸ் தலைவர்கள் இந்த தீர்ப்பை வரவேற்று உள்ளனர் கூட்டணி கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்