வாரத்தில் 3 நாட்கள் கட்டாயம் நிறுவனத்தில் பணியாற்ற உத்தரவு

பெங்களூர் : மார்ச். 4 – பிரபல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் , மற்றும் கூகுள் முன்னர் கொரோனா காலகட்டத்தில் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவித்திருந்தனர். ஆனால் இப்போது இந்த நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளன . இப்போது தொற்று பாதிப்பு மிகவும் குறைந்துள்ள நிலையில் ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுமாறு நிறுவனங்கள் வற்புறுத்திவருகின்றன. இதனால் ஊழியர் மற்றும் நிவாகத்துக்கிடையே மிக வளர்ச்சிகரமான விளைவு இருக்கும் என்பது நிறுவனங்களின் நோக்கம் . ஆனால் நிறுவனங்களின் இந்த முடிவுக்கு பல ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாட்டின் மிக பிரபல தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்று வரும் மார்ச் 31க்குள் அனைத்து ஊழியரும் வாரத்திற்கு மூன்று நாட்களாவது அலுவலகத்திற்கு வந்து பணியாற்றவேண்டும் என தெரிவித்துள்ளது. இதற்க்கு ஒப்புக்கொள்ளாத ஊழியர்கள் விளைவுகளை சந்திக்கக்கூடும் என எச்சரித்துள்ள அந்த நிறுவனம் இந்த மாற்றத்தால் கூடுதல் பயிச்சிகளுக்கான வாய்ப்புகள் , ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு மற்றும் அதிகளவில் உற்பத்திக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதே போல் இன்போசிஸ்
நிறுவனமும் தங்கள் ஊழியர்களை வாரத்திற்கு குறைந்தது மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதாவது மாதத்திற்கு குறைந்தது 10 நாட்கள் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுவதால் கூட்டு பணிகள் மற்றும் ஊழியர்களின் நலன் கருதி இந்த மாற்றத்தை தங்கள் நிறுவன சட்ட நியமங்களில் செய்துள்ளதாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போல் ஹெச் சி எல் டெக் நிறுவனமும் தங்கள் ஊழியர்களை வாரத்திற்கு மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுமாறு தெரிவித்துள்ளது. அப்படி தவறும் ஊழியர்கள் மீது ஒழுங்கீன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நிறுவனம் எச்சரித்துள்ளது. மற்றொரு முக்கிய தகவல் தொழில் நுட்ப நிறுவனமான விப்ரோவும் ஊழியர்கள் வாரத்திற்கு குறைந்தது மூன்று நாட்கள் நேரில் வந்து பணியாற்ற வேண்டும் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இந்த நிலையில் காக்னிசென்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ரவிக்குமார் கடந்த மாதம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில் இந்தியாவில் பணியாற்றும் தங்கள் நிறுவன ஊழியர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் கண்டிப்பாக அலுவலகத்துக்கு வர வேண்டும் என்றும் ,அல்லது தங்கள் குழு தலைவர் தருவிக்கும் வகையில் அலுவலகங்களுக்கு நேரில் வந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதே போல் தங்களுக்கு பதவி உயர்வு வேண்டுமெனில் கண்டிப்பாக அலுவலகங்களுக்கு நேரில் வந்து பணியாற்றவேண்டும் என அமேசான் நிறுவனமும் ஊழியர்களை எச்சரித்துள்ளது. ஊழியர்களின் பதவி உயர்வுக்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் நேரில் வந்து பணியாற்றுவதை ஒரு முக்கிய புள்ளியாக அமேசான் நிறுவனம் கொண்டுள்ளது. தவிர நிறுவனத்தின் இந்த தேவையை பூர்த்தி செயாதவர்களை பணி நீக்கம் செய்யவும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதே போல் மேட்டா நிறுவனமும் தங்கள் ஊழியர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் நேரில் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றவில்லை எனில் வேலை இழக்க கூடும் என எச்சரித்துள்ளது.பணிக்கு அலுவலகங்களுக்கு வருமாறு அறிவித்த முதல் நிறுவனம் இது என்பதுடன் இந்த நிறுவனம் சமீப கால கட்டத்தில் பெரும்பாலான பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. பணியாளர்கள் அலுவலகங்களுக்கு வந்து பணியாற்றவேண்டும் என்பதில் கூகுள் நிறுவனம் மிகவும் கண்டிப்பாக உள்ளது. இந்த நிறுவனமும் தங்கள் ஊழியர்களை வாரத்திற்கு மூன்று நாட்கள்கண்டிப்பாக நேரில் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் தவறினால் பல்வேறு விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளது. இதே போல் ஐ பி எம் மற்றும் டெல் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்கள் கண்டிப்பாக வாரத்திற்கு மூன்று நாட்கள் கண்டிப்பாக அலுவலகங்களுக்கு நேரில் வந்து பணியாற்ற வேண்டும் தவறினால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது. இதனால் அனைத்து தகவல் தொழில் நுட்ப ஊழியர்களும் பெரும் அதிர்ச்சசியிலுறைந்துள்ளனர்.