வாலிபரைக் கொன்றுவிபத்து நாடகம் ஆடிய 2 பேர் கைது

பெங்களூரு, அக்டோபர் . 31 வழக்கை வாபஸ் பெற சம்மதிக்காததால் ஆத்திரம் அடைந்து இளைஞர் மீது ஸ்கார்பியோ காரை ஏற்றி சினிமா பாணியில் கொன்று தப்பிச் சென்ற இருவரையும் புலிகேசிநகர் போலீசார் கைது செய்து வெற்றி பெற்றுள்ளனர். பிரேசர்டவுன் பகுதியைச் சேர்ந்த சையத் அஸ்கர் கொலை செய்யப்பட்டவர். இவரை கொண்ட பிறகு தலைமறைவாக இருந்த ஜே.சி.நகரைச் சேர்ந்த அமீன் மற்றும் நவாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சையத் அஸ்கர் ஒரு வியாபாரி ஆவார், அவர் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். கொல்லப்பட்டவர் பழைய வாகனங்களை பழுது பார்த்து விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்தார். இந்த நிலையில் கொலையாளிகளுக்கு
நான்கு லட்சம் ரூபாய் மதிப்பின் இரண்டு கார்களை விற்பனை செய்து இருக்கிறார் இந்த விவகாரத்தில் இவர்கள் இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது பணம் கேட்டதற்காக அமீனும் அவரது நண்பரும் அஸ்கரை தாக்கி உள்ளனர் மேலும் ஜே.சி.நகர் காவல் நிலையத்தில் அஸ்கர் அளித்த புகாரின் அடிப்படையில் அமீன் மீது 307 பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த குற்றவாளிகள் தங்கள் மீதான வழக்கை வாபஸ் செய்ய வலியுறுத்தி உள்ளனர் ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்
இதனால் கடந்த 18ம் தேதி மதியம் 12.30 மணிக்கு அஸ்கருக்கு போன் செய்து பேச வருமாறு கூறி உள்ளனர் வழக்கை வாபஸ் பெறுமாறு குற்றம்சாட்டப்பட்டவர்கள் வற்புறுத்தியதால், அஸ்கர் சென்றுள்ளார். அப்போது ஸ்கார்பியோ வாகனத்தை அவர் மீது ஏற்றி விட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்று விபத்து நாடகம் ஆடி இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.