
மண்டியா : பிப்ரவரி . 23 –
நபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ள கயவர்கள் பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசி எரிந்துள்ள கொடூர சம்பவதால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். கொலையுண்ட நபர் 30 முதல் 40 வயதாக இருப்பதுடன் இவருடைய உடலின் பாகங்களை ஹோடகட்டா , ஷிவாரா , தநாயகனபுரா மற்றும் மத்தூறு தாலூகாவின் கூளூரு ஆகிய இடங்களில் வீசி எறிந்துள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் நபரை கொலை செய்த பின்னர் உடலின் பாகங்களை கால்வாயில் வீசி எறிந்திருப்பதுடன் ஹோடகட்டா அருகில் கொலையுண்டவரின் தொடையும் மற்றும் இடுப்பு பகுதியும் , ஷிவாரின் அருகில் ஒரு கால் , டனாயயகனாபுரா பகுதியில் இரண்டு கைகள் , ஒரு கால் , மற்றும் கூளூரு பகுதியில் தலை சிக்கியுள்ளது. உடலின் வலது கையில் காவ்யா ரகு மற்றும் இடது கையில் வனஜா என்று பச்சைகுத்தப்பட்டுள்ளது . இறந்தவரின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு மீம்ஸ் மருத்துவமைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடங்களுக்கு மண்டியா எஸ் பி எஸ் சதீஷ் நேரில் சென்று ஆய்வு செய்து இந்த வழக்கில் புலன் துலக்க தனிப்படை அமைத்துள்ளார். தவிர சுற்றுப்பகுதியில் அனைத்து போலீஸ் நிலையங்களிலிருந்தும் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த கொலை தொடர்பாக தற்போது போலீசார் தீவிர விசாரணைகள் மற்றும் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.