வால்மீகி கழகத்தில் ஊழல்: ரூ. 45 கோடி பறிமுதல்

பெங்களூரு, ஜூன் 6:
வால்மீகி வளர்ச்சிக் கழகத்தில் நடந்த பல கோடி ரூபாய் மோசடி தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் ஐதராபாத் முதல் நிதிக் கூட்டுறவு வங்கியில் ரூ.45 கோடியை பறிமுதல் செய்தனர். கைதான சத்யநாராயணனுக்குச் சொந்தமான கூட்டுறவு வங்கி இது.
இந்த வங்கிக் கணக்கிற்கு ரூ.94.73 கோடி மாற்றப்பட்டது. மாற்றப்பட்டது. வங்கியின் 18 போலி கணக்குகளுக்கு 94.73 கோடி மாற்றப்பட்டது. பெரும்பாலான பணம் டிரா செய்யப்பட்டு மீதி பணம் எங்கே போனது என எஸ்ஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பரசுராம், நெக்குண்டி நாகராஜ், நாகேஸ்வரராவ், பத்மநாபா, சத்தியநாராயணா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை எஸ்ஐடி அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.