வாழைப்பழம் விலை கிலோ ரூ.100 தாண்டியது

பெங்களூர் ஆக 16-
கடந்த ஒரு வாரமாக வாழை பழத்தின் விளையும் 100 ரூபாயை தாண்டி உள்ளது. இப்போது இதன் தேவையும் அதிகரித்துள்ளது.
இது குறித்து பெங்களூர்
ஏ. பி. எம். சி., செயலாளர் ராஜண்ணா கூறுகையில், பெங்களூருக்கு வாழை தமிழகத்திலிருந்து தான் வந்து கொண்டிருக்கிறது. பெங்களூருக்கு ஏலக்கி என்ற சுகந்திரா, பச்சை வாழை ஆகிய இரண்டு வகையான வாழைப் பழங்கள் கொண்டு வரப்படுகின்றது.
ஏலக்கி வாழை தினமும் 1,500 குவிண்டால் வந்துக்கொண்டிருந்தது. ஆனால் தற்போது 1000 குவிண்டால் வாழை மட்டுமே வருகின்றது.மேலும், பெங்களூருக்கு தும்கூரு, ராம் நகரா, சிக்கபல்லாபுரா, ஆனேக்கல், பெங்களூர் ரூரல், ஆகிய இடங்களில் இருந்தும் ஏ. பி. எம். சி. மார்க்கெட்டுக்கு வருகின்றது. தமிழகத்திலிருந்து ஓசூர், மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வாழைப்பழம் வருகிறது. இதனால் ஏலக்கி வாழை ஒரு கிலோ 78 ரூபாய்க்கும், பச்சை வாழை 18 முதல் 20 ரூபாய்க்கும் கிடைக்கிறது.இது சில்லறை வியாபாரத்திற்கு ஒரு கிலோ 100 விலைக்கும் பச்சை வாழை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
திருவோணம், விநாயகர் சதுர்த்தி, துர்கா பூஜை, பண்டிகளும் விரைவில் வர உள்ளது. இதற்கு வாழைப்பழம் மிகவும் அவசியமானது என்று நாகசந்திரா வாழைப்பழ வியாபாரி பைரவர் தெரிவித்துள்ளார். எங்களுக்கு வாழை சப்ளை கர்நாடகாவில் சிவமொகா, மாவட்டத்திலிருந்து தான் அதிகமாக வருகிறது. கூடுதலாக வாழைப்பழம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் விலை தான் அண்மை காலமாக அதிகரித்துள்ளது என்றார்.பனசங்கரி வாழை வியாபாரி ஒருவர் கூறுகையில், பண்டிகை நேரத்தில் ஏலக்கி வாழைப்பழம் தான் மிக முக்கியமான நட்சத்திர பழம் ஆகும். இந்த வாழைப்பழத்தை சூரிய உதயத்திற்கு முன்னாலே விற்பனையை தொடங்கி விடுகிறோம். நாங்கள் பண்டிகை காலங்களில் 12 டன் விற்பனை செய்கிறோம். ஆனால் வழக்கமாக 6 டன் விற்பனை செய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
குடகு மாவட்டத்தின் சின்னப்பா பலந்தீரா என்பவர் கூறுகையில், தமது காபி தோட்டத்தில் ஆண்டுக்கு 700 ஏலக்கி மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் பலர் வாழை பயிரிட்டுள்ளனர். அவைகளை மைசூர், ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே விற்பனைக்கு சப்ளை செய்யப்படுகிறது. அது பெங்களூர் நகருக்கு சப்ளை செய்வதில்லை.

ஏனென்றால் ஒரு கிலோ வாழைக்கு போக்குவரத்து செலவு ரூ.25 ஆகின்றது. ஒரு லோடு 20 ஆயிரம் கிலோ வாழைப்பழம் சப்ளை செய்ய வேண்டும். ஆனால் அந்த அளவுக்கு உற்பத்தி கடினம். அத்தகைய அளவுக்கு வாகன கட்டணமும் செலுத்த முடியாது என்றார்.