வாழைப்பழ அல்வா


தேவையான பொருட்கள் :
நெய் – மூன்று ஸ்பூன்
சிறிதாக வெட்டிய பாதாம்
சிறிது முந்திரி
சிறிது உலர்ந்த திராட்சை
ரவை – ஒரு கப்
வாழைப்பழம் – ஐந்து
பால் – இரண்டு கப்
சர்க்கரை – ஐந்து கப்
ஏலக்காய் பொடி
செய்யும் முறை-
முதலில் ஒரு கடாயில் சற்று நெய் ஊற்றி திராட்சை முந்திரி பாதாமை வறுத்து வைத்து கொள்ளவும். மீண்டும் கடாயில் சற்று நெய் ஊற்றி ஒரு கப் ரவை போட்டு நல்ல மணம் வரும் வரையில் வறுக்கவும். பின்னர் வாழைப்பழத்தை சிறிய துண்டுகளாக்கி இதனுடன் கலக்கவும். பின்னர் பாலை ஊற்றி நன்றாக கலக்கி கொதிக்க விடவும். அத்துடன் சர்க்கரையை சேர்த்து ஹல்வா பதத்திற்கு வரும் வகையில் கலக்கி கொண்டிருக்கவும். கடைசியில் ஏலக்காய் பொடி சேர்த்து , ஏற்கெனவே வறுத்து வைத்துள்ள திராட்சை , முந்திரி , பாதாமை சேர்த்து பின்னர் கீழே இறக்கினால்… அப்பப்பா இந்த ஹல்வாவிற்கா எதுவும் தெரியாமல் கண்ட கண்ட கடைகளுக்கு இத்தனை நாளாய் ஏறி இறங்கிகொண்டோறிந்தோம் என நீங்களே ஆச்சரியப்படும் விதத்தில் ஒரு அருமையான மற்றும் வாய்க்கு ருசியான ஹல்வா தயார்.