விக்கிரவாண்டி தொகுதி வேட்புமனு தாக்கல் நிறைவு

விக்கிரவாண்டி: ஜூன் 21-
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாஜ கூட்டணி பாமக வேட்பாளர் சி.அன்புமணி உட்பட 17 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனு தாக்கல்
செய்தார்.தொடர்ந்து தேசிய மக்கள் கட்சி சார்பில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம், யுனைடெட் ரிபப்ளிக் பார்ட்டி
ஆப் இந்தியா சார்பில் விக்கிரவாண்டி வடக்குச்சிபாளையம் சேகர் மற்றும் தேசிய சமூக நீதி கட்சி சார்பில் திண்டிவனம் ஜனார்த்தனன் உள்பட 8 பேர் நேற்று ஒரே நாளில் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களையும் சேர்த்து 25 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்.