விசாரணைக்குப் பிறகு எடியூரப்பாவை காவலில் எடுக்க முடிவு

பெங்களூரு, மார்ச் 15:
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி.பரமேஸ்வர் இல்லத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பேசிய டி.கே.சிவகுமார், இது முக்கியமான விஷயம் என்பதால் இது தொடர்பாக உள்துறை அமைச்சர் பேசுவார் என்றார்.
பின்னர் பேசிய ஜி.பரமேஸ்வர், எடியூரப்பா மூத்த அரசியல்வாதி. இதில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. நேற்று இரவு ஒரு பெண் புகார் செய்தார். இதை கருத்தில் கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டப்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை முடியும் வரை எதையும் வெளியிட முடியாது. இது ஒரு முன்னாள் முதல்வர் தொடர்பானது. இது மிகவும் நுட்பமான விஷயம். புகார் அளித்த பெண்ணுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால், நாங்கள் அதை வழங்குவோம். விசாரணையின் அடிப்படையில் அவரை காவலில் எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இது தொடர்பாக டி.கே சிவகுமார், முதல்வர் சித்தராமையா ஆகியோரிடம் விவாதித்தோம். இது குறித்து முதல்வ‌ருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.எடியூரப்பா மீது புகார் அளித்த பெண், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறுகிறார்களே என்று கேட்டதற்கு, புகாரை கையால் எழுதாமல் தட்டச்சு செய்து அளித்துள்ளார். அதன் நகலை கொடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு முன்னாள் முதல்வர் தொடர்பானது. எதையும் கவனமாகச் கையாள‌ வேண்டும் என்றார். கர்நாடக மாநில முன்னாள் முதல் அமைச்சரும் பிஜேபி மூத்த தலைவருமான எடியூரப்பா மீது சிறுமி ஒருவர் கொடுத்துள்ள இந்த பாலியல் புகார் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புகார் கொடுத்து சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதில் அரசியல் சதி இருப்பதாகவும் சதி எதுவும் இல்லை இது உண்மை சம்பவம் தான் என்றும் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது