விஜயேந்திரா பட்டாபிஷேகம்

பெங்களூர், நவ.15- கர்நாடக மாநில பிஜேபியின் புதிய தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய். விஜயேந்திரா இன்று பதவியேற்றார். பிஜேபி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்கள் முன்னிலையில், பெரும் கொண்டாட்டங்களுக்கும், தொண்டர்களின் உற்சாகத்துக்கும் மத்தியில், மாநில தலைவராக விஜயேந்திரா பதவியேற்றார்.
பதவி விலகும் மாநில பாஜக தலைவர் நளீன் குமார் கட்டீல் புதிய தலைவராக பி.ஒய். விஜயேந்திரரிடம் கட்சி கொடியை வழங்கி பொறுப்பை ஒப்படைத்தார்.
கட்சித் தலைவராக பதவியேற்ற பின், கட்சி விதிகளின்படி, தலைவர் நாற்காலியில் அமர்ந்து, பதவிப் பிரமாணத்தில் கையெழுத்திட்டு, மாநிலத்தில் கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றார் விஜயேந்திரர்.
கர்நாடக மாநில பிஜேபி கட்சியின் புதிய தலைவராக விஜேந்திரா இன்று பதவி ஏற்றுக்கொண்டார். பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. விஜயந்திராவின் தந்தையும் முன்னாள் முதலமைச்சரமான எடியூரப்பா உள்ளிட்ட பிஜேபி தலைவர்கள் இதில் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன ஏராளமான பெண் தொண்டர்கள் விஜேந்திராவுக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர் அந்தப் பகுதி முழுவதும் பிஜேபி கட்சி கொடிகள் தோரணங்கள் கட்டப்பட்டு திருவிழா கோலம் பூண்டு இருந்தது. கட்சியின் கர்நாடக மாநில புதிய தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட விஜயந்திரா பேசும் போது கர்நாடக மாநிலம் பிஜேபியின் கோட்டை என்பதில் சந்தேகம் இல்லை. சில காரணங்களால் இந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கலாம். நமது சக்தி பலத்தை பாராளுமன்றத்தில் நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது கர்நாடக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுவேன் தொண்டர்களின் கருத்துக்களை கவனமுடன் கேட்டு நடவடிக்கை எடுப்பேன். இந்திய திருநாட்டின் பாதுகாப்பு கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சி ஆகியவை பிஜேபியின் முக்கிய நோக்கமாக உள்ளது இதில் சமரசம் செய்யும் பேச்சுக்கு இடமில்லை. தற்போது காங்கிரஸ் அரசு கஜானாவை காளி செய்து வருகிறது. இலவச திட்டங்கள் மூலம் கவர்ச்சிகர அரசியல் நடத்தி மாநிலத்தை பொருளாதார பின்னடைவுக்கு கொண்டு சென்று உள்ளது. காங்கிரஸ் கட்சியில் ஓட்டு அரசியல் குறித்து மக்கள் இப்போது தெளிவாக புரிந்து கொண்டு உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் பிஜேபியின் கோட்டை என்பதை நிரூபிப்போம். கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை அரவணைத்து சென்று மாநிலத்தில் மீண்டும் பிஜேபியின் தாமரையை மலர செய்வதை எனது முக்கிய நோக்கம் என்று விஜயந்திரா கூறினார்.