விஜயேந்திரா போட்டியிடுவது கட்சி மேலிடத்தை பொறுத்தது. எடியூரப்பா

பெங்களூர்: ஜூலை. 23 – எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை . தவிர என் மகன் விஜயேந்திரா போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடமே இறுதி முடிவு எடுக்கும் என மாநில முன்ன முதல்வரும் பி ஜே பி முக்கிய பிரமுகருமான பி எஸ் எடியூரப்பா இன்று தெரிவித்துள்ளார். ஷிகாரிபுராவில் நேற்று பேசியது குறித்து கட்சிக்குள் குழப்பங்கள் உருவாகிய நிலையில் எடியூரப்பா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா ஷிகாரிபுரா மக்கள் என்னை மீண்டும் தேர்தலில் போட்டியிடுமாறு வற்புறுத்தி வருகிறார்கள் . அதற்க்கு நான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை , அதற்க்கு பதிலாக விஜயேந்திரா போட்டியிடுவார் என தெரிவித்திருந்தேன். மக்கள் வற்புறுத்தியதால் இந்த அறிவிப்பை வெளியிட்டேன். மோதி, அமித்ஷா மற்றும் ஜி பி நட்டா இது குறித்து முடிவு மேற்கொள்ளுவர். எந்த தொகுதியில் விஜயேந்திரா போட்டியிட்டாலும் அவர் வெற்றி பெறுவார். இந்த விஷயத்தில் கட்சி மேலிடம் மேற்கொள்ளும் முடிவுகளுக்கு ஏற்ப நான் நடந்துகொள்வேன். நான் தேர்தலில் போட்டியிடவில்லை . அதற்க்கு பதிலாக என் மகன் போட்டியிட உள்ளான். இந்த காரணத்திற்காகவே நான் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி இருக்கிறேன். எனக்கு கட்சியில் போதுமான அளவிற்கு வாய்ப்புகள் சிக்கியுள்ளது. என்னை தேசிய அளவில் கட்சியினர் வளர்த்துள்ளனர் . கட்சியில் என்னை புறக்கணித்துள்ளனர் என்ற கூற்று தவறு . மாநிலம் முழுக்க பயணம் மேற்கொண்டு மீண்டும் பி ஜே பி கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவது தான் என் தற்போதைய குறிக்கோள் என பி எஸ் எடியூரப்பா தெரிவித்தார்.