விஜய்-யின் ‘வாரிசு’ வெளியானது ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை,ஜன.11- அஜித்குமார் நடிப்பில் துணிவு படம் உலகம் முழுவதும் தற்போது தியேட்டரில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் துணிவு திரைப்படம் நள்ளிரவு சரியாக 1 மணிக்கு வெளியானது. இந்நிலையில், வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் தியேட்டரில் தற்போது வெளியாகியுள்ளது.
அதிகாலை 4 மணிக்கு முதல்காட்சி வெளியாகியுள்ளது. ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகி உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நள்ளிரவு 1 மணிக்கு அஜித்தின் துணிவு ரிலீஸ் ஆன நிலையில் தற்போது விஜய்யின் வாரிசு ரீலீஸ் ஆகியுள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.