விஞ்ஞானியை தாக்கிய 3 பேர் கைது

பெங்களூர் : செப்டம்பர் . 12 – காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து விஞ்ஞானி ஒருவரை தாக்க முயற்சித்துள்ள சம்பவம் தொடர்பாக மாதநாயக்கனஹள்ளி போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். மைலாரி (22) , நவீன் (22) மற்றும் சிவராஜ் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள். தவிர இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாயுல்லா மேலும் இரண்டு குற்றவாளிகளான சோமு என்ற சோனு மற்றும் கீர்த்தி என்ற உமேஷ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராவுத்தனஹள்ளியில் கடந்த ஆகஸ்ட் 24 அன்று நானோ மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப விஞ்ஞான மையத்தின் அருகில் விஞ்ஞானி அஷுதோஷ் குமார் சிங்க் (34) என்பவர் பயணித்துவந்த காரின் கண்ணாடியை உடைத்து தாக்குதலை நடத்தியுள்ளனர். இது குறித்து மாதநாயக்கனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் பதிவாகியிருந்தது. இந்த புகார் குறித்து தீவிரமாக கருதிய மாதனயாகனஹள்ளி போலீஸ் நிலைய எஸ் பி மல்லிகார்ஜுனா பாலதந்டி இதற்கென தனிப்படை அமைத்து இந்த குழு நடவடிக்கை மேற்கொண்டு மூன்று குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். பெங்களுர் வடக்கு மாவட்டத்தின் உள்ள ராவுத்தனஹள்ளியில் நடவடிக்கையில் இறங்கிய போலீசார் நேற்று நள்ளிரவு வழிபறிக்கு சூழ்ச்சிகள் செய்துகொண்டிருந்தபோது குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து ஆயுதங்கள் , கைப்பற்றப்பட்டுள்ளன . நகரில் சமீப நாட்களாக குற்றவாளிகளின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. குற்றவாளிகள் பலர் சாலைகளில் பொது மக்களை ஆயுதங்கள் காட்டி மிரட்டி வழிப்பறி நடத்தி வருகின்றனர். இதே போல் நகரின் நாகரபாவியில் நந்தினி பால் பூத் உரிமையாளர் ஸ்வாமி என்பவனும் வீச்சரிவாள் காட்டி வழிபறிக்கு முயற்சித்துள்ளார். தன்னுடைய பேக்கரி பக்கத்தில் நின்றிருந்த வாடிக்கையாளனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் தடாலடியாக தன்னிடம் இருந்த வீச்சரிவாள் எடுத்து அவனை தாக்க முயற்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஸ்வாமி காயங்கலடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த தாக்குதல்கள் பற்றிய காட்சிகள் அருகில் உள்ள சி சி டி வி காமிராக்களில் பதிவாகியிருப்பதுடன் இந்த சம்பவம் குறித்து சந்திரா லே அவுட் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.