விடுதி மாடியிலிருந்து விழுந்து மாணவர் சந்தேக மரணம்

பெங்களூரு, மார்ச் 13:
தங்கும் விடுதி கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே விழுந்த பிடெக் மாணவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
ஆந்திராவின் கர்னூலைச் சேர்ந்த மாணவர் தாசரி பிரம்மசாய் ரெட்டி நேற்று இரவு உணவு சாப்பிட்டு முடித்த பிறகு மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிடெக் முதலாம் ஆண்டு படித்து வந்த தாசரி பிரம்மசாய் ரெட்டி, இரவு உணவு முடிந்து அறைக்குத் திரும்பியபோது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் தொட்டபள்ளாப்பூர் ஊரக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரிசையாக தற்கொலை:கடந்த 4 மாதங்களில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நேற்று இரவு சந்தேகத்திற்கு இடமான முறையில் மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவர் உயிரிழந்துள்ளார்
. நவம்பர் மாதம் வெளிநாட்டு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிப்ரவரி 6‍ ஆம் தேதி, விடுதி மாடியில் இருந்து விழுந்து ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் ஆந்திராவைச் சேர்ந்த மற்றொரு மாணவர் இறந்தார்.
புகழ்பெற்ற கீதம் பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது. வெளிப்படையாக இது தற்கொலைகள்தான் என்றாலும், பல்கலைக்கழகத்தில் துன்புறுத்தல் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு ஆகிவற்றால் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாக‌ குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.