விதிகளை மீறி நடத்தப்பட்ட பட்டாசு கடை

பெங்களூர், அக்.9-
பட்டாசு விபத்து நடந்த அத்திபெலே பகுதியில் ஸ்ரீ பாலாஜி டிரேடர்ஸ் கடைக்கு உரிமம் வழங்கியதில் பல குளறுபடிகள் இருந்துள்ளது என்று போலீஸ் சிறப்பு குழு நடத்தி விசாரணையில் தெரியவந்துள்ளது.கர்நாடகா – தமிழக எல்லையான அத்திப்பெலே என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஸ்ரீ பாலாஜி டிரேடர்ஸ் நிறுவனத்தின் கடை, மற்றும் கிடங்கு உள்ளது. தொழிலதிபர் நவீன் ரெட்டி, தந்தை ராமசாமி பெயரில் பட்டாசு வியாபாரம் செய்ய உரிமம் பெற்றுள்ளனர்.
தற்காலிக உரிமம் வழங்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு உள்ளது பல நாட்களாக ஆன்லைன் மூலம் உரிமம் வழங்கும் பணி நடந்து வருகிறது. அனுமதி வழங்கும்போது, தீயணைப்பு படை, உள்ளூர் போலீஸ் நிலையம், பெஸ்காம் அதிகாரிகள், மற்றும் நகராட்சி அதிகாரிகளிடமிருந்து தடையில்லா சான்று பெறுவது கட்டாயம். மேலும் அந்த இடத்தில் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை தொடரவும் விதி உள்ளது. இந்த விதிகளை மீறி ராமசாமி ரெட்டி, நவீன் ரெட்டி ,அனைத்து துறைகளிலும் என் ஒ சி பெற்று சட்ட விரோத உரிமம் பெற்றுள்ளனர்.
சில அதிகாரிகள் லஞ்சத்திற்கு என் .ஓ. சி. விற்றதாக குற்றம் சாட்டப்படுகிறது. கடைக்கு அருகில் ஒரு ஓட்டல், பார் மற்றும் உணவகம் உள்ளது. தெருவோர கடைகளும் உள்ளன. .உள்ளூர் அதிகாரிகள் ஆதரவும் உரிமையாளர்களுக்கு இருந்தது என அத்தி பெலே பட்டாசு வியாபாரிகளில் ஒருவர் தெரிவித்தார். விற்பனை செய்ய மட்டுமே உரிமம் பெற்ற உரிமையாளர் ,பெரிய பெட்டிகளில் இருந்த பட்டாசுகளை, மீண்டும் சிறிய பெட்டிகளின் பேக்கிங் செய்து கொண்டிருந்தார்.அதற்கு தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்றார்.
லட்சக்கணக்கான பணம் கொடுத்தால்தான் பட்டாசு கடை திறக்க முடியும் என்ற நிலை உள்ளது. அனைவருக்கும் பணம் கொடுத்து தொழில் செய்ய உரிமம் பெற வேண்டும். வியாபாரம் இல்லை என்றால் நஷ்டம் நிச்சயம். லஞ்சத்திற்கு பயந்து இந்த ஆண்டு பட்டாசு கடையை மூடிவிட்டேன் என்று ஒரு பட்டாசு வியாபாரி தெரிவித்தார்.

பாலாஜி டிரேடர்ஸ் என்ற பெயரில் பட்டாசு வியாபாரம் செய்ய இரண்டு தனி உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

2021 ஜனவரி 18 முதல் 2026 ஜூலை 28 வரை ஒரு உரிமம்.

2023 செப்டம்பர் 13 முதல் 2028 அக்டோபர் வரையில் இன்னொரு உரிமமும் ஒரே கடைக்கு இரண்டு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோல பல சந்தேகங்கள் இங்கு எழுந்துள்ளது.

எச். எஸ் .ஆர் .லேஅவுட் பகுதியை சேர்ந்த ஜெயம்மா மற்றும் அவரது மகன் அனில் ரெட்டி பெயரில் நிலம் உள்ளது.

போலீஸ் விசாரணையில் அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ராமசாமியும், நவீனும் கடைக்கு உரிமம் கேட்டு விண்ணப்பித்தது தெரியவந்தது.

கடையின் வடிவமைப்பு அறிவியல் பூர்வமற்றதாக உள்ளதால் கடையை விட்டு வெளியே வர முடியாமல் தொழிலாளர்கள் சிலர் இறந்தனர் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

சுற்றுச்சுவர்கள் சிமெண்ட் செங்கல் கற்களால் கட்டப்பட்டு மேற்கூரை தகர சீட்டுகளால் மூடப்பட்டிருந்தது.

தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இக்கடைக்கு ஒரு ஷட்டர் மட்டுமே இருந்தது. பின்புறம் ஒரு சிறிய கதவும் இருந்தாலும், அது முற்றிலும் மூடப்பட்டிருந்தது.

மற்ற இடங்களில் கடைக்குள் அலமாரிகள் கட்டப்பட்டு பட்டாசு பெட்டிகள் எங்கும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்ற அவசர காலங்களில் வெளியேற
ஷட்டரை தவிர வேறு வழி கிடையாது.

சனிக்கிழமை ஷட்டர் பகுதியிலேயே தீ பரவியது. இதனால் தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டு வர முடியாமல் இறந்து போயினர்.

ஆயிரம் கிலோ பட்டாசு சேகரிக்க அனுமதி அளித்திருந்தனர். ஆனால் கடையில் சுமார் 10 டன் பட்டாசுகள் பதிக்கவைப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது என்று தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
10×10
அடி இடைவெளி மட்டுமே பட்டாசு வைக்க அனுமதி உள்ளது ஆனால் 40 ×150 அடி இடைவெளியில் பாலாஜி ட்ரேடர்ஸ் கடை இருந்தது.

இங்கு 30 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். கடை முன் புறம் மின் கம்பி இருந்தது. அனைத்து உண்மைகளையும் பார்க்கும்போது இது சட்ட விரோதமாக கடை என்பது தெரியவந்தது.

பட்டாசு விபத்து குறித்து மாவட்ட நிர்வாகம் அலட்சியமே காரணம் என்று பசவராஜ் பொம்மை எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.