விதிமீறல்: 506 தண்ணீர் டேங்கர் லாரிகள் மீது வழக்கு பதிவு

பெங்களூரு, பிப். 24- விதிகளை மீறியதற்காக 506 தண்ணீர் டேங்கர் லாரிகள் மீது பெங்களூரு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரு போக்குவரத்து போலீசார் வெள்ளிக்கிழமை பல்வேறு விதிமீறல்களுக்காக நகரம் முழுவதும் 506 தண்ணீர் டேங்கர் லாரிகளின் ஓட்டுநர்கள் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில், சீருடை அணியாததற்காக 162 வழக்குகளும், தடை செய்யப்பட்ட‌ சாலைகளில் வாகனம் ஓட்டியதற்காக 120 ஓட்டுநர்கள் மீதும், அவர்களில் 57 பேர் நோ பார்க்கிங் மண்டலங்களில் வாகனம் நிறுத்தியத‌ற்காகவும்,
56 பேர் மீது தவறான நம்பர் பிளேட் வைத்திருந்ததற்காகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக 39 ஓட்டுநர்கள் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஒரு ஓட்டுநர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் போக்குவரத்து போலீசார் ரூ.2,64,200 அபராதம் வசூல் செய்துள்ளன‌ர்.