விதி மீறிய ஆட்டோ டிரைவர்கள் மீது 670 வழக்குகள்

பெங்களூர் : செப்டம்பர். 24 – ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எதிராக அடிக்கடி பயணிகளிடமிருந்து புகார்கள் வந்த நிலையில் போக்குவரத்து போலீசார் நகரில் சிறப்பு நடவடிக்கை எடுத்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். கடந்த செப்டம்பர் 14 முதல் 23 வரை நகர போக்குவரத்து போலீசார் இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு மொத்தம் 670 வழக்குகள் பதிவு செய்துள்ளனர் .இதன் வாயிலாக 3.36 லட்ச ரூபாய்கள் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பயனியரிடம் அதிக கட்டணம் வசூலித்த ஓட்டுனர்கள் மீதும் போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். வடகிழக்கு பிரிவு பகுதியில் கூடுதல் கட்டணம் வசூலித்த குற்றத்துக்காக 141 ஆட்டோ ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து 72000 ரூபாய்கள் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதே போல் வடக்கு பிரிவில் 213 ஆட்டோ ஓட்டுனர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு இவர்களிடமிருந்து 1.06 லட்சரூபாய்கள் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பிரிவில் பயணியர் அழைக்கும் இடத்திற்கு வராத 95 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவாகி அவர்களிடமிருந்து 47500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. வடக்கு பிரிவில் பயணியர் கேட்ட இடத்திற்கு வராத 221 ஆட்டோ ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 1.10 லட்ச ரூபாய்கள் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த 10 நாட்களின் போக்குவரத்து போலிஸாரின் சிறப்பு நடவடிக்கையால் மொத்தம் 970 வஹக்குகள் பதிவாகி 3.39 லட்ச ருபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என போலீஸ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.