விதி மீறிய நபர் கைது

ஹம்பி, மார்ச் 4-
தேசிய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு உட்பட்ட
ஹம்பியின் ஹேமகுடா வரலாற்று சின்னத்தின் மீது
விதிமுறை மீறி
ஒருவர் அதன் மீது ஏறி அதனை வீடியோ படம் பிடித்துள்ளார். அதனை இன்ஸ்டாகிராமில் ஒளிபரப்பி வைரலாக்கி உள்ளார்.
இதனை பார்த்த தொல் பொருள் ஆய்வ நிறுவன அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
மண்டியா மாவட்டம், பாண்டவ புரா தாலுகா காலனஹள்ளியை சேர்ந்த தீபக் கவுடா சேர்ந்தவர் என போலீசார் கண்டுப் பிடித்துள்ளனர். அவரை போலீசார் கைது செய்தனர்.
அந்த நபர் தனியாக சுற்றுலா வந்து படமெடுத்து இன்ஸ்டா கிராம்பில் பதிவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
தீபக் கவுடா தொல்லியல் ஆராய்ச்சி விதிமுறைக்கு புறம்பாக செயல்பட்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.தொல்லியல் விதிமுறைகள் பெறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.