கொப்பலா : அக்டோபர் .10 – டி ஜி சத்தங்களால் இறந்து போவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கங்காவதியில் இளைஞன் ஒருவன் விநாயகர் உற்சவ ஊர்வலத்தின்போது போட்டிருந்த டி ஜி சத்தத்தில் நடனமாடிக்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது . சுதீப் சஜ்ஜன் (23) என்பவன் இந்த சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன். கங்காவதியின் பிரஷாந்த் நகரில் நேற்று இரவு விநாயகர் சிலைகள் கரைக்கும் விஷயமாக ஊர்வலம் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து டி ஜெ குழுவினர் அழைக்கபட்டிருந்தனர் . இந்த இசைக்கு சுதீப் சஜ்ஜன் மிகவும் ஆர்வமாக உணர்ச்சியுடன் நடனமாடியுள்ளான் . ஆனால் ஆடிகொன்றுருந்தபோதே டி ஜெ சத்தத்தால் இளைஞன் சுருண்டு விழுந்து இறந்துள்ளான் . இந்த சம்பவத்தால் ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்டது . டி ஜெ சத்த இரைச்சலால் சுதீப்புக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது . சமீபத்தில் ஹக்ரீபொம்மனஹள்ளி என்ற நகரிலும் டி ஜெ சத்த இரைச்சலால் ஜமீர் பிஞ்சாரா (22) என்ற இளைஞன் இறந்துள்ளான் . இதே போல் துமகூருவிலும் ஒரு சம்பவத்தில் சத்த இரைச்சலால் ஒருவன் இறந்துள்ளது பதிவாகியுள்ளது. எந்த விநாயகர் இப்படி இளைஞர்களை வீதியில் சத்த இரைச்சலுடன் நடனமாடியபடி தன்னை கொண்டு சென்று தன்னை நீரில் கறைக்குமாறு கூறியுள்ளார் என்பது இளையர்களுக்கே வெளிச்சம். தவிர இது போன்ற சத்த இரைச்சல்களுடன் கூடிய ஊர்வலங்கள் போது ஊர்வல பாதைகளில் வசிக்கும் பல இருதய நோயாளிகளும் பாதிப்புள்ளாகின்றனர் என்பதை விழா நடத்துவபர்கள் யோசிப்பதில்லை என்பதே கவலைக்குரியது