விநாயகர் கரைப்பதில் தகராறு ஒருவர் கொலை

பெங்களூர், அக். 9 – விநாயகர் சிலையை ஏரியில் கரைக்க சென்ற நேரத்தில் இரண்டு கோஷ்டிகளுக்கிடையே நடந்த மோதலில் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆடுகோடி போலீஸ் சரகத்தில் நடந்துள்ளது. ஆடுகோடியில் வசித்துவந்த ஸ்ரீனிவாஸ் என்பவர் கொலையுண்டவர் . இவருடைய கொலையின் வாயிலாக இரண்டு கோஷ்டிகளின் சண்டை முடிவுக்கு வந்துள்ளது . விநாயகர் ஊர்வலத்தின்போது நடனமாடுவதில் இரண்டு கோஷ்டிகளுக்கிடையே வாகு வாதங்கள் ஏற்பட்டு இதுவே தீவிரமடைந்து இரண்டு கோஷ்டிகளும் அரிவாள் மற்றும் ஆயுதங்களால் தாக்கிக்கொண்டுள்ளார். இந்த கலவரத்தில் ரஞ்சித் என்ற இளைஞனுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் செயின்ட் ஜான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருடைய நிலையம் கவலைக்கிடமாயுள்ளதாக தெரியவந்துள்ளது . இந்த கலவரத்தை தடுக்க வந்த ஸ்ரீனிவாஸின் தாயார் மீதும் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த நிலையில் இவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த விநாயகர் சிலை கரைப்பு சமயத்தில் நடனம் ஆடுவது குறித்து இரண்டு கோஷ்டிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீனிவாஸ் கோஷ்டியிடம் நீங்கள் இங்கு நடனம் ஆட வேண்டாம் என சிலர் எச்சரித்துள்ளார். நேற்று இவர்கள் எதிர் கோஷ்டியினர் விநாயகர் ஊர்வலத்தில் ஸ்ரீனிவாஸ் நடனமாடியுள்ளார். அப்போது விநாயகர் பலி கேட்கின்றது என எதிர் கோஷ்டியினர் கூக்குரலிட்டுள்ளனர் . அப்போது இரண்டு கோஷ்டிகளுக்கிடையே வாகு வாதம் ஏற்பட்டு அது முற்றி கத்தி அரிவாளை வைத்து கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் இரண்டு கும்பல்களும் தகராறு செய்ய வேண்டும் என திட்டமிட்டே வந்துள்ளன. இந்த கலவரத்தின் போது ரௌடி பட்டியலில் உள்ள ஒருவனும் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது இந்த சம்பவங்கள் குறித்து ஆடுகோடி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி தற்போது போலீசார் குற்றவாளிகளை தீவிரமாய் தேடி வருகின்றனர்.