விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்

பெங்களூர், செப்.12- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தென்மேற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எஸ்வந்த்பூர்- பெல்காம் இடையே சிறப்புரயில்கள் இயக்கப்படுகிறது. கவுரி கணேஷா திருவிழாவுக்கு எப்போதுமே கூட்டம் அதிகம். எனவே பயணிகள் வசதிக்காக கூடுதல் ரயில்கள் விடப்படுகிறது.
செப்டம்பர் 15 ம் தேதி வெயில் எண்
078389 எஷ்வந்தப்பூரில் இருந்து மாலை 6:15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். இந்த ரயில் தும்கூர், அரிசிகெரே, பீரூர், ஹூப்ளி, தார்வாட் வழியாக பெல்காம் சென்று அடையும்.
ரயில் எண் 07390 செப்டம்பர் 16ம் தேதி மாலை 5:30
மணிக்கு பெல்காமில் இருந்து எஷ்வந்தப்பூருக்கு
மாலை 4:30 மணிக்கு புறப்படுகிறது.
அதேபோல செப்டம்பர் 17 மாலை 6:15 மணிக்கு அடுத்த ரயில், எஸ்வந்தபூரில் இருந்து புறப்பட்டு பெல்காமுக்கு செல்லும். செப்டம்பர் 18 மாலை 6:30 மணிக்கு பெல்காமில் இருந்து புறப்பட்டு, எஸ்வந்த்பூருக்கு வரும். இந்த சிறப்பு ரயில் ஏசி- 2 டயர் பெட்டியில் 7, ஏசி 3 டயர் பெட்டிகள் எட்டு, இத்துடன் ஸ்லீப்பர் கோச், இரண்டாம் வகுப்பு லக்கேஜ் ,மாற்று திறனாளிகள் பெட்டிகள் 2 ஆகியவை உட்பட 18 பெட்டிகள் இதில் இருக்கும்.
பஸ் வசதி: பண்டிகை முன்னிட்டு கே. எஸ். ஆர். டி .சி., நிறுவனமும் கூடுதல் பஸ்களை இயக்குகிறது.
இதற்காக ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்யப்படுகிறது. 5 முதல் 10 சதவீதம் வரை சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.