விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கூடுதல் பஸ்கள் இயக்கம்

பெங்களூரு, செப். 15: விநாயகர் சதுர்த்தியையொட்டி கூடுதல் அரசு பேருந்துகளை கேஎஸ்ஆர்டிசி இயக்க‌ உள்ளது.
கர்நாடகத்தில் செப்டம்பர் 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதையொட்டி சனி, ஞாயிறு, திங்கட்கிழமை ஆகிய‌ 3 நாட்கள் பயணிகளுக்கு கூடுதல் அரசு பேருந்து சேவைகளை கேஎஸ்ஆர்டிசி இயக்க‌ உள்ளது.
கர்நாடகத்தின் பல‌ ஊர்களுக்கு மட்டுமின்றி, அண்டைமாநிலங்களுக்கும் கூடுதலாக‌ 1200 கூடுதல் அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இருந்து ஷிமோகா, ஹாசன், தர்மஸ்தலா, குக்கேசுப்ரமணியா, சிருங்கேரி, மங்களூரு, குந்தாப்பூர், ஹொரநாடு ஆகிய பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து வசதி இருக்கும். மேலும் ஹூப்ளி, தார்வாட், தாவணகெரே, பெல்காம், ஷிர்சி, கோகர்ணா, விஜயப்பூர், கார்வார், பெல்லாரி, ராய்ச்சூர், கலபுர்கி, யர்ரகோபூர், பீதர், திருப்பதி ஆகிய இடங்களுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். மைசூரு சாலையில் உள்ள சேட்டிலைட் பேருந்து நிலையத்தில் இருந்து ஹைதராபாத், விஜயவாடா போன்ற பகுதிகளுக்கு அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிற்கு சேட்டிலைட் மற்றும் சாந்திநகர் பேருந்து நிலையங்களிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.