விபத்தில் இலங்கை அமைச்சர் உயிர் தப்பினார்

கொழும்பு:ஜனவரி 25
இலங்கையின் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த வாகன விபத்தில் இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்த பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கையின் காட்டுநாயாகாவில் இருந்து கொழும்பு நோக்கி அமைச்சர் சனத் நிஷாந்த தனது காரில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரியில் சனத் நிஷாந்த சென்று கொண்டிருந்த கார் மோதியது விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அமைச்சரின் கார் முற்றிலுமாக நொறுங்கி சேதம் அடைந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட 3 பேரை படுகாயங்களுடன் மீட்டு ராகம மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் அமைச்சர் சனத் நிஷாந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அமைச்சருடன் விபத்தில் சிக்கிய அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஜெயக்கொடியும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாலை விபத்தில் சிக்கி இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளது அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.