விபத்தில் சிக்கிய மணப்பெண்

Beautiful Photo of handshake of a newly married Couple In India, promising each other love and affection for the rest of their life.

பெங்களூர், ஏப். 13-
பெங்களூரில் திருமண ஆவதற்கு 16 நாட்களே உள்ள நிலையில் மணப் பெண் விபத்தில் சிக்கினார். அவரது முதுகுத் தண்டு இரு எலும்புகள் மட்டுமே முறிவு ஏற்பட்டது.இச் சம்பவம் பற்றி தெரிய வந்திருப்பதாவது:
சாந்தி நகர் நஞ்சப்பா சாலையில் சஞ்சல் சவுத்ரி (24). என்பவர் தனது வீட்டில் இருந்து வாகனம் ஒன்றில் 300 மீட்டிங் தூரத்திற்கு சென்று கொண்டிருந்த போது சாலையில் உள்ள மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில் மரத்தின் ஒருபகுதி சஞ்சல் சவுத்ரி வாகனம் மீது வீழ்ந்தது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் ஜெயநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
நரம்பியல் டாக்டர் பரிசோதனை நடத்தி முதுகு தண்டில் இரு எலும்புகள் முறிவு ஏற்பட்டுள்ளதை தெரிவித்தார்.இதனை அடுத்து, மருத்துவ கட்டண பாதிப்பு காரணமாக டிஸ்சார்ஜ் செய்துக் கொண்டனர். ராஜஸ்தானில் ஏப்ரல் 21 ல் நடக்க இருக்கும் திருமணத்தை ஒத்தி வைக்க சஞ்சல் தாயார் முயற்சித்து வருகிறார்.விமான டிக்கெட்டை ரத்து செய்வது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.