விபத்துகளில்5830 பேர் சாவு

பெங்களூர் : செப்டம்பர். 6 – மாநிலத்தில் கடந்த ஆறு மாதங்களில் நடத்த சாலை விபத்துகளில் 5830 பேர் உயிரிழந்துள்ளனர் . கடந்த மே மாதத்தில் 1094 பேரும் , ஜூன் மாதத்தில் 965 பேரும் , ஜூலை மாதத்தில் 807 பேரும் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 795 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புஏ டி ஜி பி அலோக் குமார் தெரிவித்துள்ளார்.தும்கூர் ஆகிய மாவட்ட பகுதிகளில் விபத்துக்கள் நடந்துள்ளது. மனித உயிர்களை பாதுகாக்கும் நோக்கில் போலீசார் தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர். இதே போல் பெங்களூர் மைசூர் அதிவேக நெடுஞசாலையில் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகளின் வாகன ஊட்டும் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றது. தவறான பாதையில் வந்த ஓட்டுனர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகள் பதிவாக படுகிறது எனவும் அலோக் குமார் தெரிவித்தார்.