விபத்து-அக்கா தங்கை பரிதாப சாவு

பெங்களூர் : ஜனவரி. 7 – நகரில் நேற்று இரவு நடந்த கொடூர சாலை விபத்தில் அக்கா மற்றும் தங்கை இறந்திருப்பதுடன் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் படு காயமடைந்துள்ளசம்பவம் நடந்துள்ளது . கே ஆர் புறத்திலிருந்து பழைய மதராஸ் வீதியின் மேம்பாலம் அருகில் இரவு ஒன்பது மணியளவில் மிகவும் வேகமாக வந்த இன்னோவா கார் ஆட்டோ மீது மோதியுள்ளது. இந்த கொடூர மோதலில் ஆட்டோவில் உள்ளே பயணித்து வந்த ஆட்டோ ஓட்டுனரின் மனைவி ஹசீனா (38) , மற்றும் அவருடைய அக்கா பாசிலா (40) ஆகியோர் இறந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் காலித் கான் (39) மற்றும் அவருடைய குழந்தைகளான சுமய்யா (5) மற்றும் சாதியா (3) ஆகியோர் காயமடைந்த நிலையில் மூன்று பேரும் நிம்மன்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். காயமடைந்தவர்களில் ஆட்டோ ஓட்டுநர் காலித் கானின் நிலைமை கவலைக்கிடமாயுள்ளது என கிழக்கு பிரிவு போக்குவரத்து டி சி பி கலா கிருஷ்ணசாமி தெரிவித்தார். கே ஆர் புறத்திலிருந்து பட்டரஹள்ளியின் மேடஹள்ளியின் சன்னாசந்திராவுக்கு சென்றுகொண்டிருக்கும்பபோது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் ஈடுபட்ட இன்னோவா கார் காணாமல் போயுள்ளது. ஆட்டோவில் ஓட்டுநர் காலித் , அவருடைய மனைவி ஹசீனா , இரண்டு குழந்தைகள் மற்றும் காலித் சகோதரி பாரிலா ஆகியோர் இருந்துள்ளனர். இந்த விபத்தில் ஹசீனா மற்றும் பாஸிலா இருவரும் அதே இடத்தில் இறந்திருப்பதுடன் இரண்டு குழந்தைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் என மூன்று பேர் படு காயங்கலடைந்துள்ளனர். இந்த விபத்துக்கு பின்னர் கார் ஓட்டுநர் காருடன் தப்பியோடியிருப்பதுடன் கே ஆர் புறம் போலீசார் ஹிட் அண்ட் ரன் வழக்கு பதிவு செய்து தப்பியோடியுள்ள காரை தேடி வருகின்றனர். எனவும் கலா கிருஷ்ணசாமி தெரிவித்தார்.