விபத்து: இரண்டு பெண்கள் சாவு

சென்னை: செப்டம்பர். 16 – கார் மோதியதில் ஏற்பட்டுள்ள பயங்கர சாலை விபத்தில் இரண்டு பெண் மென்பொருள் பொறியாளர்கள் இறந்துள்ள சம்பவம் நகரின் தகவல் தொழில் நுட்ப வளாகத்தின் அருகில் நடந்துள்ளது. நகரின் தொழில்நுட்ப பூங்கா நவலூர் அருகில் உள்ள ஹெச் சி எல் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த எஸ் லாவண்யா மற்றும் ஆர் லக்ஷ்மி ஆகியோர் இந்த விபத்தில் இறந்தவர்கள். நிறுவனத்தின் பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது பின்புறமாக வேகமாக வந்த கார் இவர்கள் மீது மோதியுள்ளது. ஹோண்டா சிட்டி காரை அதிவேகமாக ஒட்டி வந்த மோதிஷ் குமார் (20) இந்த விபத்துக்கு காரணமாகியுள்ளான். வாகன கட்டுப்பாட்டை இழந்த இவன் இளம்பெண்கள் இருவர் மீதும் மோதியுள்ளான். இந்த விபத்தின் போது கார் மணிக்கு 130 கி மீ வேகத்தில் வந்துகொண்டிருந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த லக்ஷ்மி கேரளாவின் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர். லாவண்யா ஆந்திராவின் சித்தூரை சேர்ந்தவர். இந்த விபத்தில் இரண்டு பேரின் தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்தசோகையால் இருவரும் அதே இடத்தில உயிரிழந்துள்ளனர் என நவலூர் போலீசார் தெரிவித்தனர்.