விபத்து இரண்டு பேர் பலி

பெங்களூர், பிப்.24-
நெலமங்கலா அருகே சாலை கடக்க பார்வை யற்ற இருவர் சென்று கொண்டிருந்தபோது, அதி வேகமாக வந்த ‘ஸ்போர்ட்ஸ் பைக்’ மோதியது. இதில் பார்வையற்ற இருவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் வெள்ளிக் கிழமை காலை நடந்துள்ளது.
ஆர்பனேஜ் என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விடுதிக்கு
எண்டகானஹள்ளி மெயின் ரோட்டை கடக்க பார்வையற்ற ஸ்ரீதர்,(50).அர்ச்சனா,(30). சென்றபோது ,அஜீத் குமார், என்பவர் ஸ்போர்ட்ஸ் பைக் கில் அதிவேகமாக வந்து இவர்கள் மீது மோதினார். இதில் பார்வையற்ற இவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டு உயிர் இழந்தனர்.பைக்கை ஓட்டிச் சென்ற அஜித் குமார் வாகனத்தில் இருந்து விழுந்து அவருக்கும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை முடிந்த பிறகு அவரை கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.