விபத்து – உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சாவு

பெங்களூரு, பிப். 27: வேகமாக வந்த பைக் மோதியதில் ஷிமோகாவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.டி.டாக்கப்பா பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பசவனகுடி காந்தி பஜார் சாலையில் நேற்று இரவு நடந்துள்ளது.
மூத்த வழக்கறிஞர் கே.டி.டாக்கப்பா பசவனகுடி காந்தி பஜார் சாலையில் காரை நிறுத்திவிட்டு டி.வி.ஜே.ரோட்டில் உள்ள தனது அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு மீண்டும் காருக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்துள்ளது.
அப்போது ஆதித்யா (21) என்பவர் வேகமாக ஓட்டி வந்த பை, நடந்து சென்ற வழக்கறிஞர் டாக்கப்பாவின் மீது மோதியது. இந்த ட‌க்கப்பாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அப்பகுதியினர், அவரை மணிப்பால் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார்.
உயர் நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களில் மூத்த வழக்கறிஞராக இருந்த டாக்கப்பா, ஷிமோகாவின் தீர்த்தஹள்ளியில் உள்ள கவுரியைச் சேர்ந்தவர். பெங்களூரில் பல ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
நேற்று இரவு டாக்கப்பா சாலையை கடக்கும் போது வேகமாக வந்து பைக் மோதிய விபத்தில் பைக் ஓட்டுநர் ஆதித்யாவும் பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பசவனகுடி போக்குவரத்து போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மூத்த வழக்கறிஞர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் வழக்கறிஞர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.