விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சாவு

யாதகிரி: ஆக். 5 – முடி எடுக்கும் நிகழ்ச்சியை முடித்து கொண்டு காரில் திரும்பிக்கொண்டிருந்த போது எமனாக வந்த லாரி மோதியதில் ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இறந்துள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் குரமித்கள் தாலூகாவின் அரகேரா அருகில் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது. ராய்ச்சூரு மாவட்டத்தின் லிங்கசுகூறு தாலூகாவின் ஹட்டி கிராமத்தை சேர்ந்த முஹம்மத் வாஜித் ஹுசேன் ,(39) , முகம்மது மேஜர் ஹுசேன் (79) , நூர் ஜஹான் பேகம் (70) , ஹீனா பேகம் (30) , இம்ரான் (22 ) மற்றும் உமேஜா (6 மாத குழந்தை ) ஆகியோர் இந்த விபத்தில் இறந்தவர்கள். இன்னும் தீவிர காயமடைந்துள்ள வாகன ஓட்டுநர் முகம்மது பாஜில் ஹுசேன் கலபுரகி ஜிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய நிலமையும் கவலைக்கிடமாக உள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் கொடங்கள்அருகில் உள்ள தர்காவில் மகளின் முடி எடுக்கும் நிகழ்ச்சி செய்துவிட்டு கட்டி கிராமத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. லாரி ஓட்டுநர். சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளான். சம்பவ இடத்திற்கு யாதகிரி எஸ் பி வேதமூர்த்தி நேரில் வந்து ஆய்வு செய்து இந்த விபத்து குறித்து குருமட்கள் போலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.