விபத்து தாய் மகன் சாவு

ஹாவேரி : ஜூலை. 27 – வேகமாக வந்த பொலேரோ சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதன் விளைவாய் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகன் அதே இடத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் ஹானகல் தாலூக்காவின் வர்தி க்ராஸ் அருகில் நடந்துள்ளது. ஹரவி கிராமத்தில் வசித்து வந்த தேவகிரி (60) மற்றும் அவருடைய மகன் ருத்ரப்பா தேவகிரி (35) இந்த விபத்தில் இறந்த தாயும் மகனும் ஆவர். இவர்கள் இருவரும் ஹாவேரியிலிருந்து ஹரவி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். . அந்த நேரத்தில் ஹானகல் வழியிலிருந்து வந்துகொண்டிருந்த பொலேரோ சரக்கு வாகனம் இவர்கள் மீது மோதியதன் விளைவாய் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆடூரு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.