விபத்து; மாநில உள்துறை செயலாளர், மனைவி, மகன் படுகாயம்

திருவனந்தபுரம், : ஜனவரி. 9 –
கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இதில் உள்துறை செயலாளராக இருப்பவர் வேணு.
இவர் தனது மனைவி சாரதா முரளீதரன், மகன் ஆகியோருடன் காரில் இன்று சென்று கொண்டிருந்துள்ளார். அவர்களது கார் காயம்குளம் பகுதியருகே சென்றபோது, லாரி ஒன்று அதன் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் வேணு, அவரது மனைவி, மகன் மற்றும் கார் ஓட்டுனர் ஆகியோர் காயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, பருமலா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்கு பின்பு உடல்நலம் தேறி வருகின்றனர் என காயம்குளம் போலீசார் தெரிவித்து உள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.