விபத்து வாலிபர் சாவு

பெங்களூர் : செப்டம்பர். 23 – பைக் சறுக்கி வீதியில் விழுந்ததில் பைக் ஓட்டுநர் தலை மீது பஸ்ஸின் சக்கரம் எறியதில் பைக் ஓட்டிவந்தவன் அதே இடத்தில் இறந்துள்ள துயர சம்பவம் சிக்கபள்ளாபுராவின் பி பி வீதியில் நடந்துள்ளது. தேவனஹள்ளி தாலூகாவின் அத்திபெலே கிராமத்தை சேர்ந்த முரளி என்பவன் இந்த விபத்தில் இறந்தவனாவான் . தேவனஹள்ளியிலிருந்து சிக்கபள்ளாபுரா மார்கமாக தன் ஹோண்டா ஆக்டிவா வாகனத்தில் சென்றுகொண்டிருந்த முரளி கிரியாஸ் ஷோ ரூம் எதிரில் திடீரென பிரேக் பிடித்துள்ளான். அப்போது பைக் சரிந்து முரளி வீதியில் தூக்கி வீசப்பட்டுள்ளான் . அந்த நேரத்தில் சிக்கபள்ளாபுரத்திலிருந்து தொட்டபள்ளாபுரத்திற்கு சென்றுகொண்டிருந்த கே எஸ் ஆர் டி சி பஸ்ஸின் பின்புற சக்கரம் முரளி தலை மீது எறியதில் அதே இடத்தில் முரளி இறந்துள்ளான் . ஆனால் இது குறித்து பஸ் ஓட்டுனருக்கு தெரியாத நிலையில் பஸ்ஸை நிறுத்தாமல் சென்றுள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் பஸ்ஸை நிறுத்தி ஓட்டுனரை போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து சிக்கபள்ளாபுரா தாலூகா போலீசார் வழக்கு பதிவு செய்து அடுத்த கட்ட விசாரணை மேற்கொண்டுள்ளனர்.