விபத்து வாலிபர் சாவு

பெங்களூரு, நவ24-
பெங்களூர் ஜீவன் பீமா நகரில் உள்ள பழைய ஏர்போர்ட் சாலையில், வேகமாக வந்த கேஎஸ்ஆர்டிசி பஸ் பைக் மீது மோதியதில், உணவுப் பொருள் கடை உரிமையாளர் பலியான சோக சம்பவம் நேற்று இரவு நடந்தது.
ஷிமோகா மாவட்டம், ஹோசநகர் தாலுகா கொத்தனகேரியை சேர்ந்தவர் ஆரிஸ் (26), இவர் ஒயிட் ஃபீல்டில் உணவு பொருட்கள் கடை நடத்தி வந்தார். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக டிசிபி கலா கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
ஜீவன் பீமா நகரில் உள்ள பழைய விமான நிலைய சாலையின் வெளியேறும் கேட் அருகே இரவு 7 மணியளவில் எச்ஏஎல் பகுதியில் இருந்து இஸ்ரோவை நோக்கி கேஎஸ்ஆர் டிசி பேருந்து வேகமாக வந்து அதே சாலையில் பல்சர் பைக்கில் சென்ற ஆரிஸ் மீது மோதியது. மோதியதில் ஆரிஸ் பைக்கில் இருந்து சாலையின் இடது பக்கம் விழுந்ததில் பேருந்தின் வலது முன் சக்கரம் உடைந்து தலையில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து ஜீவன் பீமா நகர் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.