விபத்து வாலிபர் பலி

பெங்களூரு, பிப். 24: நாகரபாவி வெளிவட்டச்சாலை மலை மகாதேஷ்வரா கோயில் அருகே வேகமாக வந்த தனியார் பேருந்து பைக் ஓட்டுநர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.முரளி (40) என்பவர் பைக்கை மலைமகாதேஷ்வர் கோவில் அருகே ஓட்டிச் சென்றபோது வேகமாக வந்த தனியார் பேருந்து பைக் மீது மோதியது. இதில், பைக்கில் வந்தவர் கீழே விழுந்ததில், பேருந்து சக்கரம் தலையின் மீது ஏறியதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
தனியார் பேருந்து ஓட்டுநரை கைது செய்த‌ ஞானபாரதி போக்குவரத்து போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.