விபத்து – ஹெல்மெட் அணியாததால் இருவர் உயிரிழப்பு

மைசூர், மார்ச் 25: டி.நரசிப்பூர் தாலுகா ஹெலவரஹுண்டி அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் இருவர் படுகாயமடைந்தனர்.குண்ட்லுப்பேட்டை தாலுகாவை சேர்ந்த பிலிகிரி (30), டி.நரசீப்பூர் தாலுகா ஆதிபெத்தள்ளி கிராமத்தை சேர்ந்த நாகராஜு (35) ஆகியோர் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த இரண்டு பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.இது குறித்து டி.நரசிப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் வேறு மாற்றுப்பாதை இல்லை. ஆனால், 2 பைக்குகளும் எப்படி மோதிக்கொண்டன என்பது தெரியவில்லை. பைக்குகளுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. இரு வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் அணியவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.