விபத்து – 2 இளைஞர்கள் சாவு

பெங்களூரு, மார்ச் 14- அதிவேகமாக தாறுமாறாக வாகனம் ஓட்டியதால் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் மடிவாலா சில்க் போர்டு அருகே நடந்தது.ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் (23), பகீரத ரெட்டி (17) ஆகியோர் உயிரிழந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இருவரும் காரில் அதி வேகமாக வந்தபோது தமிழ்நாடு போக்குவரத்துப் பேருந்து மீது கார் மோதியுள்ளது. சம்பவ இடத்திற்கு மடிவாளா போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சென்று விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர்.