விபத்து 2 இளைஞர்கள் பலி

சித்ரதுர்கா, டிசம்பர் 13- அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மொளகல்முரு தாலுகா பொம்மக்கனஹள்ளி அருகே இன்று அதிகாலை நடந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் கோனாபூர் பகுதியைச் சேர்ந்த மாரண்ணா (45) மற்றும் சங்கர் (44) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பணி நிமித்தமாக தேசிய நெடுஞ்சாலை 150(ஏ) வழியாக பொம்மக்கனஹள்ளி என்ற இடத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதியது.
தகவல் அறிந்ததும் ராம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.