விபத்து 2 பேர் சாவு

பெங்களூர் : ஜனவரி. 17 – வேகமாக வந்த கேன்டர் மோதியதில் பைக்கில் சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் இறந்துள்ள சம்பவம் பியாடரஹள்ளியின் அஞ்சனா நகர பஸ் நிறுத்தம் அருகில் நேற்று இரவு நடந்துள்ளது. ரவி (22) மற்றும் விகாஸ் (20) ஆகியோர் இந்த விபத்தில் இறந்த இளைஞர்கள் .
நேற்று இரவு 8 மணியளவில் அஞ்சனா நகர் பஸ் நிறுத்தம் அருகில் பல்சர் பைக்கில் சென்றுகொண்டிருந்த இவர்களின் பைக் மீது பின்புறமாக கேன்டர் வாகனம் மோதியுள்ளது. இதனால் கீழே விழுந்த இவர்கள் மீது கேன்டர் வாகனம் ஏறியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். உடனே இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தும் தீவிர ரத்த சோகையால் சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் இறந்துள்ளனர்.
பின்னர் இருவரின் உடலும் விக்ட்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதுடன் இந்த விபத்து குறித்து பியாடரஹள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது