விபத்து 2 பேர் சாவு

பெலகாவி : மே. 14 – மரத்தில் பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே இரண்டு இளைஞர்கள் இறந்ததுடன் ஒருவர் படு காயமடைந்த சம்பவம் காணாபுரா தாலூகாவின் கணேபைலா என்ற கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சுரேஷ் பாண்டுரங்கா தோப்பின்கட்டே (25 ) மற்றும் கணேஷ் விட்டல் பாமனே (22) ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள். காயமடைந்துள்ள மற்றொரு பைக் பயணியின் நிலைமை கவலைக்கிடமாயுள்ளது அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இந்த கிராமத்தை சேர்ந்த மூவரும் ஒரே பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர மரத்தின் மீது மோதியுள்ளது. அதில் இரண்டு பேர் அதே இடத்தில் இறந்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காணாபுரா போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.