விபத்து 2 பேர் சாவு

பாகல்கோட்டை, மார்ச் 15: வேகமாக வந்த பைக் மற்றும் டம்டம் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் ஹ‌னகுந்தா தாலுகா நாகுரு கிராஸ் அருகே நேற்று இரவு இந்த விபத்து நடந்துள்ளது. இதில் இறந்தவர்கள் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசகுரு தாலுகாவில் உள்ள போகபூரைச் சேர்ந்த எரப்பா பவடகவுடா (45) மற்றும் அபிஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்தில் டம்டம்மில் இருந்த‌ எரப்பா பவடகவுடா, பைக்கில் வந்த அபிஷேக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பலர் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஹனகுந்தா போலீசார், இறந்தவர்களிடன் உடல்களை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.