விபத்து – 3 பேர் உயிருடன் தகனம்

பெங்களூரு, அக.3-
பெங்களூர் தலகட்டாபூர் அருகே நைஸ் சாலையில் இன்று அதிகாலை நடந்த பயங்கர விபத்தில் தாய், 2 குழந்தைகள் உயிருடன் கருகி பலியானார்கள் தந்தை படுகாயமடைந்தார்.
மைசூர் சாலையில் இருந்து கனகபுரா சாலை நோக்கிச் சென்ற காரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பயணித்தனர்.​​இதில் கணவன் மனைவி இரண்டு மகள்கள் இருந்தனர். கார் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. பலியான தம்பதி மகேந்திரன் மற்றும் சிந்து என தெரியவந்தது. இந்த விபத்து அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
கார் சாலையை விட்டு விலகி லாரி மற்றும் கல்வெர்ட் சுவரில் மோதியது. லாரியும் கவிழ்ந்தது. அப்போது கார் தீப்பிடித்து எரிந்ததில் காரில் இருந்த இரண்டு மகள்கள் உடல் கருகினர் இதில் ஒரு மகள் காரில் பலியானார் மற்றொரு மகள் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்.

ஆன்லைனில் டாடா நெக்ஸான் காரை வாடகைக்கு எடுத்து இரவு நேரத்தில் நாகசந்திராவுக்கு மகேந்திரா காரை ஓட்டிச் சென்றுள்ளார். இன்று அதிகாலையில். இவர் காலையில் குடும்பத்துடன் நைஸ் ரோட்டுக்கு வந்தார். அப்போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்த மகேந்திரன் குடும்பம் விஜினாபூர், ராமமூர்த்தி நகரில் வசிப்பதாக தெரியவந்துள்ளது
இறந்த உடல்கள் கிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன. தந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.விபத்தில் கார் முற்றிலும் எரிந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த தலகட்டாப்பூர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.