Home Front Page News விபத்து 3 பேர் பலி

விபத்து 3 பேர் பலி

நாமக்கல்: நவ. 2:
மோகனூர் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி உள்பட மூவர் உயிரிழந்தனர்.நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ராசிபாளையம் காட்டூரைச் சேர்ந்தவர் விவசாயி மலையண்ணன் (70). இவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தனது மனைவி நிர்மலா (55) மற்றும் உறவினர் செல்லம்மாள் (65) ஆகியோருடன் நடைப்பயிற்சிக்குச் சென்றுள்ளார். மோகனூர் – நாமக்கல் சாலையில் மூவரும் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.காட்டூர் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது நாமக்கல்லில் இருந்து மோகனூர் நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மூவர் மீதும் மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட மலையண்ணன், அவரது மனைவி நிர்மலா, உறவினர் செல்லம்மாள் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Exit mobile version