விபத்து: 3 வயது குழந்தை சாவு

பெங்களூரு, மார்ச் 9: அவலஹள்ளி காவல் நிலையத்திற்குட்பட்ட பிதரஹள்ளி அருகே, வேகமாக வந்த லாரி விளையாடிக் கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை மீது மோதியதில், குழந்தை உயிரிழந்தது.
நேற்று மாலை பிதரஹள்ளியைச் சேர்ந்த கவி என்ற 3 வயது சிறுமி சாலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது லாரி மோதியதில் குழந்தை உயிரிழந்தது. ஆவலஹள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.