விபத்து: 4 இளம் கிரிக்கெட் வீரர்கள் பலி

அமராவதி, பிப். 19: மகாராஷ்டிர மாநிலம் நந்த்கான் கந்தேஷ்வர் தாலுகாவில் உள்ள ஷிங்கனாபூர் அருகே மினி பேருந்தும், கான்கிரீட் மிக்சர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 4 இளம் கிரிக்கெட் வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலர் பலத்த காயமடைந்த சிலர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டென்னிஸ்-பால் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக யவத்மாலுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது
உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீஹரி ரவுத், ஜெய்ஷ் பஹாலே, சுயாஷ் அம்பார்டே மற்றும் சந்தேஷ் பதார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.காயமடைந்த சில வீரர்கள் தாலுகா சுகாதார மையத்திலும், சிலர் அமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஷிவாங்கானில் கான்கிரீட் மிக்சர் லாரி மீது பேருந்து மோதியதில் உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்த‌னர். பலத்த காயமடைந்த கிரிக்கெட் வீரர்கள் பிரஜ்வல் புச்சே, லௌகிக் பெமாசே, மயூர் நாக்புரே, மங்கேஷ் பாண்டே மற்றும் ஹரிஷ் தாகே என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பூஷன் பிவாஸ்கர், பிரஜ்வல் கோச்சே, பிரனய் யேவதிகர், தீரஜ் ரவுத், வேதாந்த் அகாரே, சவுரப் கும்ரே, ஓம் அடல்கர், ஹரிஓம் லுங்கே, பூஷன் பதார், ஜல் தேஷ்முக், அக்‌ஷய் சவுத்ரி, சங்கேத் சாவதே, அனிருத் அக்ரே, சுபோத் கத்ரே, ரஹீல் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.