விபத்து – 6 பேர் உயிரிழப்பு 20 பேர் படுகாயம்

தென்காசி: நவம்பர் 24-
தென்காசி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடைகால் அருகே துரைசாமிபுரம் என்ற இடத்தில் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், 20 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பயணிகள் பலியாகினர். தென்காசியில் இருந்து ஸ்ரீவல்லிபுத்தூர் சென்ற பேருந்தும் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதின. இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகியுள்ளனர்.
இடைக்கால் அருகே உள்ள துரைசாமிபுரம் என்ற இடத்தில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி 20 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 5 பேரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்துகள் விபத்தில் சிக்கினவா? அல்லது அதிவேகத்தில் இயக்கியதால் விபத்து நிகழ்ந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தென்காசியில் ஏற்பட்ட இந்த சாலை விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகளை ஏற்றுவதற்காக அதிவேகத்தில் போட்டிபோட்டுக்கொண்டு அசுர வேகத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், சாலை விதிகளை மீறினாலும் அப்பகுதியில் உள்ள போலீசார் கண்டுகொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு பயணிகள் மத்தியில் முன்வைக்கப்படும் நிலையில், தென்காசியில் இத்தகைய பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.