விபத்து2 பேர் பலி

பெங்களூர், ஆக.18-
பெங்களூரில் வடக்கு மண்டல பகுதியில் இரண்டு விபத்துகளில் இருவர் பலியான சம்பவம் நேற்று நள்ளிரவு நேரத்தில் நடந்துள்ளது.
தேவனஹள்ளி சாலை போக்குவரத்து போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆட்டோ மீது குடிபோதையில் வந்த கார் ஒன்று மோதியதில் ஆட்டோ டிரைவர் நவீன் குமார் (51) என்பவர் பலியானார்.
இச்சம்பவம் நேற்று இரவு 10:45 மணிக்கு ரேவா கல்லூரி அருகே ஆட்டோ டிரைவர் நவீன் குமார் தனது ஆட்டோவை இயக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பி.டெக் படித்து வரும் மாணவர் ஸ்டீபன் சந்தோஷ் (19) என்பவர், தனது நண்பர் பிறந்தநாள் விருந்தில் கலந்து கொண்டு குடிபோதையில் காரை இயக்கி வந்தார்.
ரேவா கல்லூரி அருகே கார் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் நவீன் குமார் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
இது குறித்து தேவனஹள்ளி போக்குவரத்த போலீசார் ஐபிசி 279, 304 , மோட்டார் வாகன சட்டம் விதி 185 பிரிவின் கீழ் எஃப். ஐ .ஆர். பதிவு செய்துள்ளனர்.
நவீன் குமார் சர்ஜாபூரை சேர்ந்தவர் . இவர் தற்போது காமாட்சி பாளையத்திற்கு குடி பெயர்ந்து உள்ளார் .
இவர் மனைவி, மகளுடன் காமாட்சி பாளையத்தில் வசித்து வந்தார். இவரின் மனைவி பி. எம். டி. சி பஸ் கண்டக்டர் ஆக இருந்து வருகிறார் என்ற தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.
பைக்கில் சென்றவர் சாவு
எச். எம். டி .பிரதான சாலையில் ஜல சவுதா கட்டடம் அருகே விபத்தில் ஒருவர் பலியானார்.
இது குறித்து ஜால்ஹள்ளி போலீசார் கூறுகையில், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் நள்ளிரவு 12 முதல் 1 மணிக்கு இடையே
சாமுவேல் (34) என்பவர் சென்று கொண்டிருந்தார்.
நடைபாதை வளைவில் இடுபட்டு கீழே விழுந்தார் இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக கே. சி. ஜெனரல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு
சிகிச்சை அளிக்கப்பட்டது.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து நிமான்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ஆனால் அவர் இறந்து விட்டதாக நிமான்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.
சாமுவேல் நந்தினிலே வசித்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.