விபத்து2 பேர் பலி

கள்ளக்குறிச்சி, ஆக. 8- கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.