விப்ரோவை மிஞ்சிய திருப்பதி சொத்து மதிப்பு

திருப்பதி: நவம்பர். 7 – ஆந்திர மாநிலத்தின் முக்கிய ஆன்மீக ஸ்தலங்களில் ஒன்றாகியுள்ள திருப்பதி கோயில் அறக்கட்டளை 2.5 லட்ச கோடிகள் மதிப்பிலான நிரந்தர வருவாயை கொண்டுள்ளது. இந்த வருவாய் நாட்டின் முன்னோடி நிறுவனமான விப்ரோ நெஸ்லே இந்தியா நிறுவனத்தைவிட அதிகமாக இருக்கும் நிலையில் திருப்பதி வெங்கடேசப்பெருமாள் மிக அதிக செல்வந்தர் என்ற புகழுக்கு பாத்திரமாயுள்ளார். திருமலா திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை (டி டி டி ) சுமார் 2.5 ஐந்து லட்ச கோடி நிரந்தர வருவாயை கொண்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப நிறுவனமான ஐ டி நிறுவனம் விப்ரோ 2.14 கோடி நிரந்தர வருவாயை கொண்டுள்ளது. இதே வேளையில் நெஸ்லே இந்தியா நிறுவனம் 1.97 கோடி மற்றும் அரசு துறை எண்ணெய் நிறுவனமான ஓ ஏன் ஜி சி 1.74 கோடி நிரந்தர வருமானத்தை கொண்டுள்ளது. இந்த அனைத்து நிறுவனகளையும் திருப்பதி வெங்கடாசலபதி பின்னுக்கு தள்ளியுள்ளார். திருப்பதி வெங்கடாசலபதியிடம் 10.25 டன் தங்கம் , மற்றும் 2.5 டன் தங்க நகைகள் , மற்றும் 960 சொத்துக்கள் உட்பட மொத்தம் 2.6 லட்ச கோடி நிரந்தர வருவாய் கொண்டிருப்பதன் வாயிலாக உலகின் அதி செல்வந்த கோயில் என்ற புகழை திருப்பதி பெற்றுள்ளது. திருப்பதி திருமலா தேவஸ்தான அறக்கட்டளை இன்று தன் சொத்து விவரங்களை வெளிப்படுத்தியது.